என் நெஞ்சத்தில்..

சீர்காழி சபாபதி
டிசம்பர் 24, 2016 08:52 பிப

உணர்வுகளுக்கு
இல்லை பஞ்சம்
என்றும் உன்
நினைவுகளோடு
நான் தஞ்சம்

சொல்லியதெல்லாம்
மிகக் கொஞ்சம்
உன்னையே
விரும்பும் நெஞ்சம்

கனவுகளுக்கேது
துயில் மஞ்சம்
பேராவல்
என்னுள் எஞ்சும்
உனதழகோ
மனதை விஞ்சும்

உயிரின்துடிப்பு
நிதம் மிஞ்சும்
உன்னைத் தொடவே
விரல்கள் கெஞ்சும்
கவிதைக்குள்
உன்னையே
மனம் கொஞ்சும்!..