இழப்பதே என் வாழ்வின் சாபமா?

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 23, 2016 11:48 பிப
வாழத்தொடங்கியிருந்தேன் உனக்காக‌
அரும்பிலேயே கிள்ளியெறிந்து
மறுபடியும்.. கனத்த இதயம்...
உவர்ப்பு ஈரம் உலரா கன்னங்கள்...
நொறுக்கப்பட்ட மனம்...
தள்ளிவிட்டாய் என்னை பரிதாப நிலையில்!

நின்னைப் பற்றிய அறிவு குறைவெனினும்
உன் மனதைப் படித்த காரணத்தால்
உன் வாழ்க்கைத்துணையாய் வாழவே
கொண்டேன் வேண்டுதல்...

இழப்பதே என் வாழ்வின் சாபமா?
ஒவ்வொரு முறையும் ஆசைகள் இழந்து
நினைவுகள் இழந்து நின்னையும் இழந்து..
உயிரே பறிக்கப்பட்டும்
நடைபிணமாய் நடமாடும் நான்..