நானும் எனக்குள் நீயுமாய்...

பூங்கோதை செல்வன்
டிசம்பர் 19, 2016 02:32 பிப
 வெறுமையும் தனிமையின் விகாரங்களும் 
விரட்டி விரட்டிக்கொண்டேயிருக்க 
கைகளை பற்றிக் கொண்டே பலம் கொடுத்த நீ 
காணாமல் காற்றோடு கரைத்துவிட 
நீநிரம்பிக்கிடந்த  வெற்றிடங்களை  
நிரப்ப உன் நினைவுகளும் நீயில்லா வலிகளுமாய் 
நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பயணம் 
நின்றுபோகும் கணமெதுவோ...
யாசித்து நிற்கிறேன் எனதுயிரே 
யாவும் துறந்துவிட்ட நிட்டை நிலையிலே
நானும் எனக்குள் நீயுமாய்