யாண்டும் பிரியா மீனா

KalpanaBharathi
டிசம்பர் 19, 2016 11:05 முப
வேண்டும் வரமருள் பாண்டியன் மாதேவி 
யாண்டும் உனதுபுகழ்  பாடிட   வேவேண்டும் 
தாண்டவம் ஆடிடும்  வெள்ளியம்ப  லத்தானை  
யாண்டும்  பிரியாமீ   னா


~~~கல்பனா பாரதி~~~

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

படத்திலுள்ள காட்சி போல் மதுரை மீனாட்சி ஆலய திருச்சுற்றில்
அழகிய பெரிய சிற்பம் வடிவம் உள்ளது. தரிக்கத் தவறாதீர்கள்
எத்தனையோ ஆலயங்கள் பார்த்திருக்கிறேன். மதுரைக் கோபுரம்
ஆலயத்தின் அழகிற்கு இணையாக எதுவும் இல்லை .
சொக்கனின் மீனா சுந்தரியை தரிசித்து வாருங்கள்