நின் ஆறுதல் பரிசு!

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 15, 2016 10:58 பிப
நீ கிடைத்தாய் எனக்காக அப்படி ஒரு பேருவகை
கர்வம்.. உலகின் சிறந்த அதிர்ஷ்டசாலி நானென்று

எத்தனை ஒத்திகை உன்னுடன் வாழப்போகும்
ஒவ்வொரு நொடிகளுக்காக...

என்னுள் நீயே உயிரென்றும் நீயின்றி நானில்லையென்றும்
உணர்ந்த நிமிடங்கள்...

நட்பாய் மட்டுமே நின் உறவு, தருவதற்கில்லை திருமாங்கல்யமென்று
சிக்கவைத்துக் கொண்டாயே சூறாவளியில் என் மனதை!!

உள்ளத்தின் வலிகள் புதைத்து சரியென சம்மதம் சொல்லிச்
சென்றிடவா என் தனிமைக்குள் மீண்டும்?

பிரிந்திடாதே உயிரேயென நரம்புகள் அறுத்துக்கொண்டு
செல்லவா என் மரணம் தேடி?

வீழ்ந்து கேட்டுக்கொள்ளவா உன் பாத‌ங்களில்
தலைவா எனை ஏற்பாயோவென...

எப்படி சொல்ல? உன் நெஞ்சம் தலைசாய்ந்து கொள்ளாது
தூக்கமில்லை இனி எனக்கென்று..

எப்படி சொல்ல? வேறல்ல உனைப் பிரிதலும்
என் உயிர் பிரிதலுமென்று..

கிடைப்பதில்லை நீயெனக்கு‍_ காலடியில் வீழ்ந்து கெஞ்சினாலும்
இதயத்தில் தெம்பில்லை உயிரே உண்மையைத் தாங்கிக்கொள்ள..!

செல்கின்றாயே உயிராக இருந்தும் உடலென்னை விட்டு...
நான் கொண்ட அன்பிற்கு இதுவே நின் ஆறுதல் பரிசா???