நினைவலைகள்

கார்முகில்
டிசம்பர் 06, 2016 07:09 பிப
2016 ஜனவரி

இடைநில்லா பேருந்தில்
தினமும் இனிதான
அலுவலகப் பயணம்
அரைமணி நேர பயணத்திலும்
அறிமுகமில்லா தோழிகள் கூட
அறிமுகமாகி அளவளாவிய நிமிடங்கள்
அலுவலக அவசரத்திலும்
அசைப்போட்ட அன்றாட நிகழ்வுகள்
அன்பான தோழிகளின்
அவசர சமையலை
அவசரமில்லாமல் ருசிபார்த்த தருணங்கள்
ஆனந்த பயணம்


2016 டிசமபர்
அறிமுகமான தோழிகள் கூட
அளந்து வைத்த அனிச்சை
சிரிப்போடு
ஆழ்ந்து விடுகிறோம்
ஆந்த்ராய்டோடு
பேசிக் கொள்கிறோம்
பக்கத்தில் அமா்ந்திருக்கும்
தோழியுடன்
பஸ்பிரெண்ட்ஸ்
குரூப்பில் - - -!
ஆந்த்ராய்ட்டு பயணம்