நம்பிக்கை

KalpanaBharathi
டிசம்பர் 05, 2016 11:09 முப

பூவிரியும் பொழுது விடியும் எனும் நம்பிக்கையில்
பொய் விரியும் கவிதை எனும் நம்பிக்கையில்
நாள் விரியும் உதயம் வரும் எனும் நம்பிக்கையில்
நட்பு விரியும் அன்பு தொடரும் எனும் நம்பிக்கையில்
உறங்கும் விழி விரியும் நாள் விடியும் எனும் நம்பிக்கையில்
இரவு துயிலும் பகல் வரும் எனும் நம்பிக்கையில்
தளர்ந்த உள்ளமும் எழுச்சி பெறும் தன்னம்பிக்கையில்
குகைவழியில் கால் நடக்கும் குகை முடிவில் வெளிச்சமுண்டு எனும் நம்பிக்கையில்
குளிர் முடிந்தால் வசந்தம் வரும் எனும் நம்பிகைதான்
வசந்த வாழ்வின்  வாசல் கதவு நம்பிக்கைதான் !
தள்ளிப் பார்ப்போம் நம்பிக்கை வாசல் கதவினை !


~~~கல்பனா பாரதி~~~