பள்ளி நட்பு

anusuya
டிசம்பர் 03, 2016 05:21 பிப
'நான் வந்துட்டேன் ' என
உலகுக்கு அறிவிக்க
அழுகையுடன் வந்தோம் !

அம்மாவின் அன்பில்
அழுகை மறந்து
புன்னகைக்க துவங்கினோம் !

கவிழ்ந்தோம் , விழுந்தோம்
ஒரு நாளில் எழுந்தோம்

அத்தை என ஆரம்பித்து
அத்தனை வார்த்தைகளையும்
மழழைத் தமிழில்
உலறிக் கொட்டினோம்

பள்ளிக்கூடம் போக
ஆசையாய் புறப்பட்டு
பள்ளிவாயில் வந்ததும்
அழுது புரண்டு
அம்மாவையும் அழவைத்து
ஒரு வழியாய் நாம்
'அ' எழுதக் கற்றோம்

'அ ' வில் ஆரம்பித்த
கல்விப் பயணம்
தொடர் கதையாய் தொடர்ந்தது
ஒன்று , இரண்டு என
பன்னிரெண்டாம் வகுப்பு வரை !

நமெக்கென ஒரு நண்பர்
கூட்டம் தானாய் அமைந்தது

விட்டுக் கொடுக்காமல்
தட்டிக் கொடுத்து
தவறை உணர்த்தி
அன்பால் அதட்டி
நம்மோடு சிரித்து
நமக்காக ஜெபித்து
வேதனையில் நம்
கண்ணீரைத் துடைக்கும்
அடுத்த 'அம்மாக்களை '
கண்டோம் அந்த
நண்பர் கூட்டத்திலே

ஒருவருக்காக ஒருவர்
அழுதிருக்கிறோம் !
சமந்தமே இன்றி
நம் தோழிக்காக
யாரோ ஒருவரோடு
சண்டை போட்டிருக்கிறோம்
ஒருவரை ஒருவர்
புரிந்திருக்கிறோம்
ஒருவர் மனதின்
நினைவுகளை மற்றொருவர்
அறிந்திருக்கிறோம்

ஒரு உண்மை ,
முடியப் போகிறது
நம் பன்னிரண்டு வருட
கல்விப் பயணம்

பிரியப் போகிறோம்
நம் தோழிகளை
தவிர்க்க முடியாத
கொடுரமான பிரிவு

காலம் இதற்கு
மருந்து போடுவதில்லை
மாறாக , காலம்
மறைக்க முயற்சிக்கிறது

கல்லூரியில் ,
அடுத்த வருடம்
யாரை அடிப்பேன் ?
யாரிடம் அடிவாங்குவேன் ?
யாரிடம் உரிமையாய்
கோபித்துக் கொள்வேன் ?
யார் என்னிடம்
உரிமையாய் கோபித்துக் கொள்வார்?
யாரை நான்
பேசியேக் கொள்வேன் ?
யார் என்னைப்
பேசியேக் கொள்வார் ?
யாருக்கு நான்
'பல்பு' கொடுப்பேன் ?
யார் எனக்கு
'பல்பு' கொடுப்பார் ?
யாருடைய பண்டத்தை
நான் பிடுங்கித் திண்பேன்?
யாரிடம் இருந்து
என் பண்டத்தை
காப்பாற்ற ஓடுவேன் ?
யாருடைய சிரிப்புக்காக
நான் அர்த்தமேயின்றி
வீணாய் நடிப்பேன் ?
யார் நடிப்பார்
எனக்காக ?

ஒருவேளை என்
இத்தணைக் கேள்விகளுக்கும்
பதிலாக யாரேனும்
வந்தாலும் ,
உன் பார்வை
எனக்குத் தரும்
நம்பிக்கையை யார்
தரக் கூடும் ?

'அடுத்தது என்ன
படிக்கலாம் ' என்ற
வெளிப்படையான கேள்வியோடு
இதயத்தில் இத்தணை
கேள்விகளை சுமந்துக் கொண்டே
நகர்கிறோம் நாம்

நாவினால் சுட்ட
வடு போல
நீ இனி
என்னோடு இருக்கப்போவதில்லை
என்ற ஆறா காயத்துடன்
கண்களில் கண்ணீருடன்
முடிகிறது உனக்கான
என் கவிதை !


(நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது
எழுதியது . இந்தக் கல்வி ஆண்டில் தங்கள் நண்பர்களை பிரியும் ஒவ்வொருவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம் )