செல்லாமல்போன ஐநூறும் ஓர் முதியவரும்

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
செல்லாமல்போன ஐநூறும் ஓர் முதியவரும்
(ஆக்கம் – நாகசுந்தரம்)
 
மதிப்பின் உச்சியிலே ஓர்நாள் இருந்தோம்.
செல்லா காசானோம் ஓர்நாள் இன்று
கல்லாவில் இருந்தாலும் ஓர் பொருட்டே இல்லை
பொல்லாப்பை சுமந்ததுவே பொதுவில் மிச்சம்
இல்லை என்று துரத்துகிறார் எந்தன் சொந்தம்
பொத்தி பொத்தி வைத்ததெல்லாம் அன்றே போச்சு
சுத்தி சுத்தி வந்தாலும் நாங்கள் சுமையாய் ஆச்சு
வரிசையாக நின்று எமை வழி துரத்தலாச்சு
வரிவரியாய் போட்ட துணி கடைக்காய் ஆச்சு
துக்கத்தை சுமந்து எமை தூரபோட்டீர்
தூக்கி எமை போட்டாலும் புன்னகைதான்
ஏக்கம் இது உங்களுக்கும் ஓர்நாள் வாரும்
சிக்கனத்தை மறவாமல் சீராய் வாழ்வீர்
எங்களைப்போல் புதிய சொந்தம் ஆக்கிடாதீர்
மக்கள் உங்கள் மக்கள் என்று மதித்து வாழ்வீர்