நண்பனே விழித்தெழு ...!

கவிப்புயல் இனியவன்
November 29, 2016 09:43 முப
நண்பனே விழித்தெழு ...!
-----

நண்பனே விழித்தெழு ...! 
நண்பனே விழித்தெழு ...
இதற்கு மேலும் பதுங்க்காதே ...
போராட்டத்தை -நீ
சந்தித்தால் தான் .......
உன் வெற்றி உறுதி...

போர்வைக்குள் 
வாழ்ந்துகொண்டிருந்தால்
போடா நீயொரு மனிதனா என்று
உலகம் உன்னை உதறித்தள்ளும் ....!!!

சிந்திக்காமல் சிதறிக்கொண்டு
திறமையை சிதறடிக்கிறாய் நண்பா ..
அழுகிறது உன் திறமையை பார்த்து
திறனற்றுப்போன உன் திறமைகள்....!!!

நீ அதைக்கண்டு ....
கொள்ளவில்லை .உன்னிடம்இருக்கும் ....
திறமையை அறிந்தவன்-நான்...
உயிர் நண்பன் சொல்லுகிறேன் ....
வாழ்க்கையைஎதிர்த்து போராடு ....
வாழும் வரை தலைநிமிர்ந்து......
வாழ்ந்திடு ....!

&
கவிப்புயல் இனியவன்