அன்பின் மொழி

முகில் நிலா
November 27, 2016 01:14 பிப

இப்படித்தான்
ஒவ்வொரு முறையும்
தப்பிக் கொள்கிறாய்!

அடர் அன்பின்
மொழி மறைத்து
பூட்டிக் கொள்கிறாய்!

நமக்கான பொழுதுகள்
நமக்காக காத்திருந்து
நாமின்றி நடைபோடுகிறது!

உதடுகளை காட்டிலும்
உள்ளங்கள் தான்
மீ அதிகப் போர் செய்கின்றன!

உன்னைக் குறித்து நானும்
என்னைக் குறித்து நீயும்
நேரெதிர் எண்ணம் வளர்க்கின்றோம்!

பூக்காடு வளர்க்கும் இவள்
உனது முற்காவலுக்கு
பயந்து போய்விடவில்லை!

நீ என்ற நம்பிக்கை போதும்
நிரந்தரமில்லா இவ்வாழ்க்கை
நிம்மதியோடு கடந்துவிட!

அலை கடலின்
நுரை ததும்பும்
மணல் வெளியாய்
உன் வருகை எதிர்நோக்கியே நான்!