பணம் என்னடா பணம்! - Mano Red

மனோ ரெட்
November 26, 2016 10:02 முப
எல்லோருக்கும் 
தேவைப்படுகிறது
பல நேரங்களில் பணம்
சில நேரங்களில் மானம்.
.
உடல் விற்ற பணத்தில் 
உடைகள் வாங்கப்படுகின்றன.
கடவுளைப் பார்க்க 
பணம் கொடுத்துவிட்டு,
வேண்டுதலின் பெயரில்
திருப்பி கேட்கப்படுகின்றன.
.
யாரோ ஒருவரால்
சம்பாதிக்கப்படும் பணம்,
யாரோ ஒருவரால்
திருடிச் செல்லப்படுகிறது.
பணத்துக்காக கொலை செய்ய
பணம் தேவைப்படுகிறது.
.
வயிற்றில் அடித்து 
சம்பாதித்தவன்,
வயிறு பசித்த இன்னொருவனுக்கு
தர மறுக்கிறான்,
அவனை எல்லாரும்
‘பிழைக்கத் தெரிந்தவன்’ என்கிறார்கள்.
.
மனிதனோ, கடவுளோ
யாராக இருந்தாலும்
பிணம் எரிக்க 
பணம் கேட்கப்படும்,
பிணவாசம் உணர்ந்தால் 
பணவாசம் அற்றுவிடும்.
.
அரசன் சுவைத்த பணம்
அடிமையின் நாக்கிற்கு
எட்டுவதில்லை,
அதிகம் சேர்த்த பணம் 
அன்பின் வழிக்கு 
வருவதில்லை.