நண்பனிடம் சில வார்த்தைகள்...

வினோத் கன்னியாகுமரி
கவிதையாக வருகிறது நண்பா
உன்னிடம் பேச நினைத்தால்
 
விரும்ப முடியுமா?
இப்படியும் ஒரு நண்பனை...

அழகாக இருக்கிறது
காதலை விட இந்த நட்பு

சுகத்தை விட வலிகள்
இழப்புக்கள் அதிகம் காதலில்

ஆனால் ஏதும் இல்லை
நட்பில் இழக்க‌

சுகமாக இருக்கிறது நட்பில்
சிறு கோப‌ங்களும் சண்டைகளும் கூட‌

இல்லை இதில் சுய நலம்
இல்லை நீயா நானா போட்டி

இல்லை ஜாதி மதம்
இல்லை ஏழை பணக்காரன் பேதம்

காமம் நிறைந்தது காதல் முத்தம் _ஆனால்
தாயன்பு போன்று களங்கமற்றது நட்பு முத்தம்

பிரிக்கும் காதல் குடும்ப உறவுகளை _ஆனால்
இணைக்கும் நட்பு குடும்பங்களை

விரும்புகிறேன் உன்னை என்பதைவிட பிடிக்கிறது
உன்னை நண்பனாய் விரும்புகிறேன் என்பது

சொல் இப்போது, சிறந்ததல்லவா
காதலைவிட நம் நட்பு...?

என்ன தந்தாய் நீ எனக்கு,
என்ன செய்தாய் எனக்காக...?

 இப்படி என் இதயத்திற்குள்
 உயிர் நண்பனாய் அடைபட்டுக்கொள்ள...

ஏன் உன்மேல் இத்தனை அன்பு?
நீ எப்படி என் உயிர் நண்பனானாய்?

 பதில் இல்லை நண்பா
 கேள்விகள் மட்டுமே என்னிடம்

நிறுத்தப் போவதில்லை எது நடந்தாலும்
உன்னை விரும்புவதை மட்டும்...
 
(என் அன்பான நண்பர்களுக்கு சமர்ப்பணம்)