இறங்கி வருவாயே

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
*இறங்கி வருவாய்*
(நாக சுந்தரம்)

நெடுமாலே உன் உறக்கம் இன்னும் 
கலையவில்லையா
நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா?

என் அக்ஞாந உறக்கம் தனை
விலக்கவேண்டுமே
நீயோ மாயையினை போர்த்துகொண்டு
உறங்குகிறாயே

வாயினிலே கருடனவன் காத்திருக்கிறானே
வேகமாக வர உனக்கு 
நேரமில்லையா

குசேலனுக்காய் ஓடி வந்து 
குதிக்க வில்லையா
குரல் எடுத்து நான் 
கூவுகின்றேன் 
கேட்கவில்லையா

வேதம் கொஞ்சம்
ஓதவில்லை அந்தகோபமா
பாதம் தன்னை பற்றி நின்றேன்
பார்க்கவில்லையா

பூசை இல்லை பெரிதாக
அந்த எண்ணமா
கண்ணப்பன் பூசைக்கு
உன் உறவு வல்லையா

மனம்போன போக்கினிலே
போகின்றேனே
குதித்து வந்து தடுக்க உந்தன்
குதிரை இல்லையா

மன பகை என்னை துரத்தி
நிற்க உனக்கு உறக்கமா
கால்பிடிக்கும் இலக்குமியின்
காதல் மயக்கமா

சக்கரமாய் சுழலுகின்றேன்
சகம் இதனிலே
உன் சக்கரமும்
உன்னைபோல்
உறங்குகின்றதா

உன் பக்தர்கள் 
சுப்ரபாதம் தினம் 
பாடுகின்றாரே
காதில் விழும் அளவு அவர்
குரல் இல்லையா

பக்தனும் வண்ணானாய்
ஆகிவிட்டேனா
போதும் உந்தன் யோக நித்ரை
இறங்கி வருவாயே