விடியல் நிச்சயம்!!!

வினோத் கன்னியாகுமரி
காலமிடும் கோலத்தில் நாம் அலங்கோல‌மாகிவிட்டோம்
விதியின் பிடியில் நாம்! விலக முடியாத நாம்!

விடிவை நோக்கும் ஒவ்வொரு நாட்கள்...
பொழுது விடிகிறது, நம் பொழுது தவிர்த்து!

குளமாகும் நம் கண்ணீர் என்பதால்
எட்டிப்பார்க்காது வறண்டு விட்டது மழையும்!

மழைவரும் போது வெயிலை எதிர்பார்ப்போம்
ஒழுகி நிறைந்த வீட்டு அறைகள் உலர!!

வெயில் வரும் போது மழையை எதிர்பார்ப்போம்
வற‌ண்ட மனம் குளிர் சேர!!

விருந்தினர் வந்தால் மகிழ்ச்சியும் கவலையும்...
மகிழ்ச்சி‍‍! _ விடிவு பிறக்குமென்று..!
கவலை!_ விருந்தோம்ப முடியவில்லை என்று..!

நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டாலோ,,,
நன்றாகவே புகுந்து விளையாடுகிறது விதி...!!!

விடிவை நெருங்கும் ஒவ்வொரு கணமும்
நெருங்குகிற‌து பலமடங்காய் இருள்...!

சோகம் மறைத்து சிரிக்கும் நொடியெலாம்
உள்ளே அழுகிறது உண்மை நிலையறிந்த மனம்...

கவலை மறக்கிறோம் ஒரு விடயத்தில்,
உண்டு துயரம் நிறைந்தோர் எங்களைவிட பலர்
சிறிது அவர் துயரம் விட எங்கள் துயரம்...

விடிவு வரும். வராமலா போய்விடும்..?
எங்களுக்கும் விடியல் நிச்சயம்...!!!