பாரதி நினைவில் ஒரு பா....... நாகசுந்தரம்

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
பாரதி நினைவில் ஒரு பா.......
நாகசுந்தரம்
 
எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக
பொங்கி வரும் புதுக்கவிதை
தந்த பாரதி நீயே
 
அன்று சொன்னாய் அறிவுரைகள்
அற்புதமாக
இன்று அதை மறந்து விட்டார்
இந்திய மக்கள்
 
மிதித்திடவே வேண்டுமென்றாய்
பாதகர் தன்னை
கதியென்றே காலில் விழுறார்
மதி மயங்கியே
 
பொங்கியெழு என்று சொன்னாய்
புதுமைப்பெண்ணை
அங்கியிலே ஆசை வைத்து
அதை அணிந்தாரே
 
கவிதையது தொழிலென்றாய்
கவிதையாகவே
பணத்திற்கு பாட்டெழுதி முழு
தொழிலாக்கி விட்டாரே
 
அச்சமில்லை அச்சமில்லை என்று
ஆர்பரித்தாயே
கச்சை கட்டும் மாந்தரின் காலில்
விழுந்தெழுகின்றாரே
 
முரசு கொட்டி மானிலத்தை
முன்னேற்ற நினைத்தாயே
அரசு கட்டில் அதில் அமர்ந்து
ஆடுகின்றாரே
 
பண்புடைய மனிதகுலமாய்
மாற்ற நினைத்தாயே
கற்ற வித்தை தன்னை தர
காசை கேட்கிறார்
 
கணக்கு எனக்கு பிணக்கு
என்றே காதில் கூறினாய்
நீதி என்ற கணக்கு இங்கே
பிணக்கு ஆச்சுதே
 
வேதனெறி வேண்டுமென்று
நாதம் பாடினாய்
படுபாதகர்கள் மதவெறியால்
பேதம் பார்க்கிறார்
 
பிறந்துவிடு மண்ணில் நீயும்
கவிஞராகவே
அறைந்துவிடு அவர்முகத்தில்
அன்று போலவே
 
அஞ்சி அஞ்சி வாழ்ந்த தெல்லாம்
ஆற்றில் போகட்டும்
கஞ்சி தனை குடித்தாலும்
உன்போல்
மிஞ்சி வாழட்டும்
 
கொஞ்சி பேசி குடும்பத்திலே
கூடி வாழட்டும்
அஞ்சி அந்த நமனும் உன்னை
இங்கு கொஞ்சம்
அனுப்பி வைக்கட்டும்