நீ இல்லையேல் நான் இல்லை

காளீஸ்
November 02, 2016 12:35 பிப
நான் பிறந்த பொழுதே
நீயும் பிறந்து விட்டாய்
நீ எனக்கானது என
நான் உணந்ததே இல்லை
உற்றாா் உறவினா் இருந்தும்
நான் அனாதையாக்கப்பட்ட பொழுது,
காலம் கடந்து துவண்ட பொழுது,
நான் உனை உணந்தேன் - நீ
எனக்குள், எனக்காக,என்னுடனே இருப்பதை,
முட்டி மோதி, போராடி
கஷ்டப்பட்டு ஜெயிக்கும் பொழுதே
நான் உன்னை உணா்ந்தேன்
நான் துவண்டு விழும்பொழுதெல்லாம்
நீ துணையாய் நின்றாய்,
போதும் இ்ந்த வாழ்க்கை என
நான் நினைத்த பொழுதெல்லாம்
நீ என்னை தூக்கி விட்டாய்,
உன் பலம் கொண்டே வாழ்கிறேன்
நீ இல்லையேல் நான் இல்லை