சும்மா இருப்பதே சுகம்

பிரபு
November 01, 2016 04:17 பிப
படித்ததில் பிடித்தது.
அன்பர்களே

          ஒரு  பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை  எடுத்துக்கொண்டு  அதை ஆடாமல் அசையாமல்  ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்கள் நீங்கி தண்ணீர் தெளிவாகி விடும் . 

ஏதும் செய்யாமல் சும்மா வைத்திருந்தால் தானே தெளிந்து விடுகிறது . அது போல்  எந்த நேரமும் இயங்கி கொண்டே இருக்கும் மனதை ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் வேறு ஒன்றையும் நாடாமல் சும்மா வைத்திருந்தால் மனதில் இருக்கும் களங்கங்கள் தானே விலகி தெளிவாகி விடும் .
         
தெளிவு என்பது இல்லாத இடமே இல்லை . தெளிவாக இருந்தால் தான் நன்றாக பார்க்க முடியும் . பாட்டு சத்தம் தெளிவாக இருந்தால் தான் நன்றாக கேட்க  முடியும் . அறிவு  தெளிவாக இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் .

          "  தெளிவை தெளிவாய் தெளிந்து தெளிவே தெளிவாய் தெளிவாய் "
              தெளிவு குரு மேனி காண்தல் ----திருமூலர் பாடல் .
               
இதில் குரு என்பது (இறைவன் ) 
மேனி என்பது (தெளிவு .)
மனம் இயங்காமல்  எண்ணமற்ற 
(சும்மா இரு ) நிலையில் இருந்தால் தானே தெளிந்துவிடும் .  ஆதலால் சும்மா இரு . சும்மா இருப்பதே சுகம்