சில்லறைக் காதல்

கார்த்திகா    பாண்டியன்
மங்கையவள் கண்ணில் விழுந்தாள் மாலை மய‌ங்கிய நேரம் தனில், சிற்றுந்தில் ஏறியவள் சீட்டினை பெற்றுக் கொண்டாள் என்னிடம், சிரிப்புடன் எனை நோக்க சிந்தை தெளியாமல் நின்றேன் நான், சன்னலில் சாய்ந்தவள் விழிகளை மறைத்துக் கொண்டாள், கண்கள் ஏங்கின அவள் கடைக்கண் பார்வைக்காக, சற்று நிமிடங்களில் நிமிர்ந்தவள் ஆவலுலன் எனை நோக்க, சற்றும் எதிர் பாராதவனாய் ஆசையுடன் சென்றேன் அவள் வசம், சில்லறை பாக்கியை கேட்ட அவளிடம் திகைத்துப் போய் நின்றேன் செய்வதறியாமல்!