இறைவா!

முகில் நிலா
October 25, 2016 03:02 பிப

நிந்திக்கவும்
நிதம் துதிக்கவும்
நின்னையன்றி
எவர் உளர் எனக்கு!?

அன்பை உள்ளங்கையில்
மூடி வைத்து உலகம் கொணர்ந்தவள்!!

தன்னம்பிக்கையும்
தலைக்கன‌மும்
இழந்த போதும்
உன்னம்பிக்கை  போகவில்லை!!!

இலையுதிர்த்து  தளிர்த்தலாய்
உயிர் பிரிந்து உடல் உதிர்க்கும்
செயலும் உனக்கோர்  வேடிக்கைதான் !!!!

உனக்கென பெயர் எதுவும்
அவசியமில்லை
இயற்கையும் இறைமையும்
பிரித்தறியா மனம் போதும்!!!!

மின்னலும் இடியும் மழையுமாய்
மரமும் செடியும் கொடியுமாய்
விலங்கும் பறவையும் மனிதனுமாய்
உன்னைக் கண்டுண‌ர்கிறேன்..!

நீ எங்கும் நிறைந்தவன்
இப்போதென்
சிந்தையுளும் நிறைந்தாய்...

#இறைவா!