வேண்டுதல்

வினோத் கன்னியாகுமரி
சுவாசம் மறைந்தாலும்
 வாசம் மறையாத‌
மலராய் மாற வேண்டுகிறேன்...

துளிகண்ணீர் சிந்திடா
 மென்மை மலர்போல‌
மென்மையாய் மாற வேண்டுகிறேன்...

காற்றடித்து ஒடிந்தாலும்
 மனம் கலங்கா மரம்போல‌
உறுதியுடன் வாழ வேண்டுகிறேன்...