வர்ணனை

சரவணன் ந.பா
October 17, 2016 06:16 பிப
உன் காரிருள் கருவிழியை கண்டு கார்மேகமும் ஒளிந்து கொண்டதோ!

உன் உடை நேர்தியின் சிறப்பை வியந்து கலைமயிலும் தன் தோகை சுருட்டி கொண்டதோ!

உன் மாயக்குரலொலியில் கானம் படும் குயிலும் அயர்ந்ததோ!

உன் சிரிப்பிசை கேட்டு கொலுசின் முத்துக்களும் நாணி தலை குனிந்ததோ!

வல்லினம்,மெல்லினம்,இடையினம் கலந்த எண்ணிலக்கியமே!
கள்வனையும் கவிஞன் ஆக்கும் காரிகையே!

பிரம்மனின் தூரிகையே!

மணம் பொருந்திய மல்லிகையும்  தோற்றதடி உன் கூந்தல் வாசனையில்...

மழை நீரைவிட தூய அன்பு கொண்டவளே...

காற்றில் கரையும் கற்பூரம் போல கரைந்தேனடி உன் அன்பில் நானும்......