கொடி

mahendhiran
October 15, 2016 12:13 முப
வாடகைக்கு  வந்தக்  கூட்டம்
வேடிக்கை பல காட்டி நம்மை 
வாடிக்கையாளராக  வளைத்துப்போட்டது  
அந்தக்கூட்டம்


அந்நியனை வெளியேற்றி 
ஆளும் நம் கொடியேற்றி  வாழ்ந்தாலும் 
நாம் வாழவில்லை  இன்னும் 
நம்மை  நாமே  ஆளவில்லை சுதந்திரம்  என்று  மட்டும்
சுதந்திரமாக  சொல்ல  வைத்தது 
அந்நியதந்திரம் 
அந்நிய பொருட்களால்  நம்மை
அடிமையாக்கியது அவனின்
அற்புதமந்திரம்    


நாட்டுக்கு  நல்லதென
எதை செய்தோம் 
நமக்கென்ன என்றுதானே 
எதையும் செய்யாமல்  விட்டோம் 


அந்நிய பொருளின் மோகம் 
அன்னை பாரதத்திற்கே  சோகம் 
ஆதலால் 
அன்னை  பாரதப் பொருளின்  பயன்பாடு 
அன்னை பாரதத்திற்கே உயர்பண்பாடு