தென்றல்பாடும்தென்பொதிகை தமிழிசை

KalpanaBharathi
October 07, 2016 09:31 முப

கோதையும் பாடினாள் கண்ணன் திருப்பாவை 
கொஞ்சும் மலர்பாடும் காலைஆ ராதனை 
தென்றல்பா டும்தென் பொதிகை தமிழிசை 
வண்டுகள் பாடிடும் வண்ண மலர்க்கவிதை 
வண்ண மண‌மலர் தென்றலுடன் வந்துநீயும் 
வண்ண விழியினளே பாடு 


பஃறொடை வெண்பா

~~~கல்பனா பாரதி~~~