பொய்முகம்

தமிழரசி ர
October 03, 2016 07:59 பிப

பலவண்ண
பச்சோந்தியாய்
பொய்முகம் போற்றிக்
கொள்(ல்)கிறேன்...

ஒவ்வொரு வண்ணமும்
எனக்கு நானே பூசியதல்ல
கட்டாயப்படுத்தி கைகளவு
புகுத்தி சாயம் போக வண்ணம்
அலையவிட்டவர்கள் இவர்கள் தான்
இன்று ஒன்றும் தெரியாதது போல
அவனும் ஒர் பொய் முகத்தை மாட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறான்...

முகமூடியை
மாற்றி மாற்றி என்
முகத்தை அழித்த சமுதாயத்திற்கும்
எனக்கும் உண்மையில்
இப்போதுநான் யார்யென்பது
விளங்கவேயில்லை?

அவசர 
உலகத்தில் எந்த முகத்தை
எப்படி மாற்றா?-என்ற
பேரதிர்ச்சியிலும்
பெரும் குழப்பத்திலும்
பல வண்ண பொய் 
முகமூடியை கையில் சுமந்து
கண்ணாடி முன் மாட்டி அழகு பார்க்கிறேன்

எப்போது வேண்டுமானாலும்
கிழிக்க தாயாராகும்
பொய்முகமூடியில் 
அதுவும் ஒன்றுதான்
இதுவும் ஒன்றும் தான்.!


தமிழர‌சி