முடுச்சவிழ்க்க முடியாத இரகசியம்

தமிழரசி ர
October 03, 2016 07:56 பிப

இந்த தென்றலை 
நான் விரும்பவில்லையெனனில்
அது உன் பார்வைக்கு பின்புறத்தில்
என்னை தீண்டுகிறது...

அந்த
நெருப்பை சற்று பிடித்திருக்கிறது
ஏனேனில் அவை உன் 
உதடுகளிலிருந்து கோபமாய்
பிரசவிக்கிறது...

சின்ன தூறல்களை
காட்டிலும் பாதிப்புகூடும்
இயற்கை சீற்றத்தை 
இரசிக்கவே செய்கிறேன்

கோப கரத்தின்
அடர்ந்த பாச ரேகையின்
சில தீண்டல்கள்
முடுச்சவிழ்க்க முடியாத
இரகசியமாகவே கிடக்கிறது...


தமிழரசி ‍‍