குட்டிக் கதை = நம்பிக்கை இழந்தவன்  

malar manickam
October 02, 2016 12:17 பிப

       ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.

     ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.

     
இரண்டு எறும்புகளும் பசியாக  இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.

     ‘ நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.

     ‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.

  நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.

 ‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போகிறேன்;’ என்றது செவ்வெறும்பு.

     ‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.

     ‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.

     எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘ இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,
 
   ‘ இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம் ’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு,  சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.
 
   மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து,

    ‘ கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’

     ‘நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்ட..’

     ‘ என்ன சொல்லுறீங்க..’

   ‘ நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்த நிச்சயம், எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்.

   கடைசியா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ , வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.
 
எதை  இழந்தாலும்  நம்பிக்கையை  
                                        மட்டும்   இழக்காதே.