காவேரித் தாய்

பூங்கோதை செல்வன்
October 02, 2016 09:04 முப
காவேரி
துள்ளி ஓடும்
பொன்மான் குட்டி!

அடகு வைத்த கூமுட்டைகள்
நாங்கள்
அடக்குமுறை செய்யும்
கொடுமைகாரர்கள்...

நஞ்சை புஞ்சைகளெல்லாம்
பேருந்து நிலையம் மிக அருகிலென்று
காண்கிரெட் மாடிகளுக்கு விற்ற
மூத்த குடிமகன்கள் நாம்...

நீ கொடு
நீர் கொடுயென்று
கேட்க்கும் நேரத்தில்
காரனோடை ஆற்று பகுதியில்
மணல் கொஞ்சம்
காணவில்லையாம்...

திருடர்களை
எங்கே தேட?
காவேரி மாநாட்டில்
கலந்து கொண்டிருக்கும்

நடுவரிசையிலோ
முதல் வரிசையிலோ
கடைசி வரிசையிலோ
திருடனோ திருடியோ
மறைந்திருக்க கூடும்...

யாராலும்,எவராலும்
கண்டுபிடிக்க இயலாத
பொய் முகமூடியை அழகாய்
பின்னிவைத்திருக்கும் அவர்கள்
சமூதாயத்தின் முக்கியப்புள்ளியாக கூட
இருக்கலாம்...

பொன்மான் குட்டியின்
குழந்தைகளான
குளம்,குட்டை,ஏரி
இவைகளை விற்று
வணிக வளாகத்தையும்
கல்லூரிகளையும் எழுப்பினவனை
கூட அப் பேரணியில்
பார்த்து அதிர்ச்சியடைய
 அவசியமில்லாதது...

நிற்கும்
இடத்தை தோண்டி பார்க்கும்
அவசியம் ஏற்பட்டால்
எத்தனை ஏரி
எத்தனை குளத்தின்
மரண வாக்குமூலம்
கிடைக்க பெறலாம்...

லாரி லாரியாய்
விற்ற கடைசி மண்
கைப்பிடியின் இரத்த கொதிப்பை
உணர்ந்திருக்க கூடுமின்று...

நிலம்.நீர்,காற்று,நெருப்பு,ஆகாயமென
எதையுமே ஒழுங்காய் 
பாதுகாக்காத நீயும்,
நானும் தான்
போராட்டாத்தின்
தலைமை தாங்கிகள்...

அடகுவைத்த 
பொன்மானை 
மீட்டெடுக்கும் வேளையில்
தண்ணீர் இரத்தமாகவோ
இல்லை நிறமிழந்தோ இல்லை
கலையிழந்தோ கிடைக்க நேரிடலாம்...

நம் உரிமைகளையும்
உடைமைகளையும் அடகு
வைத்து மீட்டுவது புதிதல்லவே...

இன்னும்
பிச்சை கேட்டுக்கொண்டே
இருக்கும் அரிய தருணத்தில்
குழாய்களையும்,நீர் பிடித்து
வைத்த குடங்களையும்
பத்திர படுத்துங்கள்..

பொன்மான்
ஓடிவரும் தருணம்
காலுடைத்தோ
கவலையோடோ வரக்கூடும்

தூக்கி தழுவி
இடுப்பில் வைத்து கொண்டாடும்
புண்ணிய நதியை விற்ற
ஒழுக்கம் கேட்டவர்களின்
வரிசையில்
 நீயும் ஒருவன்
நானும் ஒருவன் 

--ஸ்டெல்லா தமிழரசி ர--