தமிழ் நண்பர்கள் தளம் (மீள்ப் பதிவு)

ஜோஸ்
செப்டம்பர் 27, 2016 01:56 பிப
           ( நம் தளத்தில் October 29, 2013 அன்று பதியப்பட்ட பதிவு இது)

நட்பு உள்ளங்களை
இணைக்கும் தளமிது,
நட்பின் எண்ணங்களை
பரிமாறும் தளமிது,
தமிழினை சிறப்புறச்
செய்யும் தளமிது
கவிதை கதை
இன்னும் எத்தனை எத்தனை
சுவைகளையும் தரும் ஒரே தளமிது!

எங்கள் மனதின் எண்ணங்களை 
எழுத்து ருவங்களாக்கி அதனையும்
வெளியிடும் இனிய‌ தளமிது!
முகமறியா கவிஞர்களையும
அறியச் செய்த‌ தளமிது.......

புகழான‌ சாமியார்களையும்
அறிமுகம் செய்த‌ தளமிது!
ஆரோக்கியமான விவாதங்களையும்
களங்கண்ட‌ தளமிது....

எத்தனையோ
குடும்ப‌ விஷயங்களுக்கும்
ஆறுதலினைத் தரும் தளமிது...!
பல‌ இடங்களிலிருந்தாலும்
 தமிழால் ஒன்றினைக்கும் தளமிது...!


கல்லூரி நண்பர்கள் போல் 
அனைவரும் அரட்டை அடிக்கும்
இன்ப‌ தளமிது............

தமிழில் பதிவிடுவதையும்
எளிதாக்கி தரும் தளமிது....... 
அது தான் எங்கள்
தமிழ் நணபர்கள் தளம்...........

தமிழால் இணைந்தோம்.......
தமிழ் நண்பர்கள் தளத்தால்
நண்பர்களானோம்....................
நட்பினைத் தொடருவோம்...
தமிழிருக்கும் வரைக்கும்
இன்னும் வளரும் தளமிது.....