நான் யார் ????????????

ஜோஸ்
செப்டம்பர் 27, 2016 01:34 பிப

நான் என்று சொல்வதில் 
பெருமை அடைகின்றேன் 
நான் மட்டுமே.......

பிறர் என்னை
பெருமை பாராட்டுமளவிற்கு
சாதித்திட முயன்றேன்
ஓடினேன் உழைத்தேன்
ஆனால் முடியவில்லை.....

நான் யார் 
எனக்குள் நானே
கேட்டு கேட்டு என்னை
நானே தேடுகின்றேன்
இன்னும் ஆரம்பம் கூட‌
காண வில்லை என்னுள்!

என்னுள் ஒன்றுமில்லை
என்னால் ஒன்றுமில்லை
என்னால் எண்ணியதை
நானே அடைய முடியவில்லை!

என்னால் நினைத்ததை
என்னால் மறக்க இயலவில்லை!
என்னால் தொடர்ந்ததை
என்னால் விட முடியவில்லை!

நான் யாரென்று
எனக்கே புரியவில்லை..
புரிந்திடத் தான் தேடுகின்றேன்
எனக்குள் நானே
விடைகளுக்குப் பதிலாக‌
இன்னு மதிகமதிகமாக‌ 
கேள்விகளே வருகின்றது....

நினைவுகளை தடுத்திட‌
முயல்கின்றேன் முடியவில்லை
நடந்ததை மறந்திட‌
முயல்கின்றேன் முடியவில்லை
நடக்கப் போவதை
நினையாம லுமிருக்க‌
முயல்கின்றேன் முடியவில்லை!
நடக்க போவதை மாற்றயென்னி
முயல்கின்றேன் முடியவில்லை!

எனக்குள் நானே
தேடுகின்றேன் என்னை 
தேடித்தேடி பல புதிய‌
விஷயங்களையும தெரிந்திட‌
செய்கின்றேன் ஆனாலும்
என்னை ய‌றிந்திட
முயல்கின்றேன் முடியவில்லை!


என் பிறப்பும்
நானறியாமல்
என் இறப்பும்
நானறியாமல்
நடந்தால் இவ்வாழ்க்கையில்
நான் யார்?????

எனக்குள் நானே
தேடுகின்றேன் என்னை
விடையில்லா கேள்வித்
 தான் வாழ்க்கையா...
காணமுடியாத புதிர்த்
தான் வாழ்க்கையா......