முழங்கிக்கொண்டே இருப்போம்

பூங்கோதை செல்வன்
செப்டம்பர் 23, 2016 12:31 முப
தூது விட்டோம் பகையே..கேள்
மிதிக்கும் உன் கழுகுக் கால்களுக்கிடையே
மீதமிருந்த தமிழர் நாம்
துயரத்தில் துவண்டிருந்தோமேயன்றி...
துயின்று போகவில்லை...சுதந்திர
தாகத்தோடு நாவரண்டு
தவித்திருந்தோமென-இந்த
தேர்தல் வாக்குகளால் உணர்த்திவிட்டோம்...

தியாகச் செம்மல் திலீபனின் வாக்கு
தீப்பிழம்பாய் பற்றியதோ தமிழரிடை.. உன்
அடிவருடி பிழைத்துண்டவர் தம்
அரியணையாம் ஊர்க்காவற்றுறையே
அசைந்தது கண்டாயா... 
அது தான்டா தமிழன்...

பதுங்கிக் கிடப்பவை எல்லாம் பூனையென்று 
பகல் கனவு காணும் உனக்கு
புரிந்திருக்கும் இப்போது.. நீ
பிடித்த வால் எதுவென்று...
பசிக்கும் போதும் புல்லை
புசிக்கும் இனமல்ல... புரிந்து கொள்...
மூச்சடங்கினாலும் 
முழங்கிக்கொண்டே இருப்போம் சங்கு
மீண்டுமொரு விடியல் வரை..


குறிப்பு:
22 September 2013 அன்று எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன்.