குட்டிக் கதை = துருப்பிடிக்க விடாதே

malar manickam
செப்டம்பர் 21, 2016 08:00 பிப
 
 
         மாவட்ட அளவிலான ஒட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதம் தீவிர  பயிற்சியுடன் களத்தில் ஒடுவதற்கு தயாராக இருந்தான் மணி. இந்த முறை எப்படியாவது பரிசு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்துது.

 
     விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையைப் போல பறந்தன. எல்லாரையும் மீறி முதல் இடத்தை பிடித்தான். பரிசு வாங்கிய கைகயோடு வீட்டிற்கு சென்றான்.
 
   வயலில் உழுது கொண்டிருந்த அப்பாவை நோக்கி சென்று பரிசைக் கொடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு உனது விடாமயற்சிக்கும், தொடர் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று பாராட்டினார்.
 
            சில மாதங்கள் கடந்தன. பொங்கல் தினத்தன்று மணியின் ஊரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. ஊரார் முன்னிலையில் நடத்த தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை. கால்களில் ஏதோ வலி தெரிந்தது. பரிசு பெறவே போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசு பெற்றான். தன்னால் முதல் பரிசு பெற முடியவில்லையே என்ற வருத்ததோடு அப்பாவிடம் சொன்னான்.

        
         ‘இந்த ஏர்கலப்பையை பார்த்தயா, இதை ஒரு வாரம் தான் பயன்படத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது.
        
          இதுபோல தான் உன்னிடம் திறமையும், ஆற்றலும் இருந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சி இல்லை” என்றார் அப்பா
          
           ‘வெற்றி பெற உழைத்துக் கொண்டேஇருக்க வேண்டும் இல்லையென்றால் துருப்பிடித்துப் போய்விடும்” என்பது மணிக்கு புரிந்தது.