நீங்களும் வெண்பா எழுதலாம் 3

KalpanaBharathi
செப்டம்பர் 19, 2016 06:06 பிப

1 எழுத்து
எழுத்தினால் உருவாவது 2. சொல்
சொல்லைப் பிரிப்பது 3. அசை
அசையினால் உருவாக்கப்படுவது 4. சீர்
சீர் சீருடன் இணைவது தளை
கற்பனை அழகுடன் இவற்றை வடிவமைப்பது தொடை.
இந்த இலக்கண வழியில் உருவாகி வருவது யாப்புக் கவிதை.
அமிர்த சாகரின் யாப்பருங்கலக் காரிகை யாப்பு வழியில்
கவிதை புனையும் முறையைக் கூறும் விரிவான நூல்.

நாம் வெண்பாவை எடுத்துக் கொண்டுள்ளோம்

எழுத்து அ முதல் ஒள வரை 12 உயிரெழுத்து ஃ ஆயுத எழுத்து
இதில்...
 அ இ உ எ ஒ .....குறில் எழுத்துக்கள் 5

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள.... நெடில் எழுத்துக்கள் 7

இது போல் மெய் எழுத்துக்கள்  க் முதல் 18
இவை உயிருடன் இணந்து 18 *12 =216 உயிர் மெய் எழுத்துக்கள்

க  ச ட த ப ற ங ஞ ந ன ம ண ய ர ல வ ழ ள‍‍‍.....இவை குறில்

கா சா டா பா றா ..............நெடில்கள்
இந்தக் குறில் நெடில் ஓசையினால்தான் அசை உருவாகிறது

நேர் அசை  தனிக் குறில், தனி நெடில் , குறில் ஒற்று, நெடில் ஒற்று
கொண்டு உருவாகும் .
எ.கா : க நேர் கா நேர் ; கல் நேர் கால் நேர்

நிரை அசை  குறில் நெடில் , இரு குறில் இவற்றுடன் ஒற்று கொண்டு
உருவாகும்.
எ.கா : குவா...  குறில் நெடில் ; குமார் ....குறில் நெடில் ஒற்று

அதுபோல் ...விழி ...இரு குறில் ; பொழில் ....இரு குறில் ஒற்று

இப்பொழுது சென்ற கட்டுரையில் சொன்ன அசை வாய்ப்பாட்டை
நினைவு கொள்வோம்

அசை வாய்ப்பாடு : 
நேர் நேர்----- தேமா 
நிரை நேர்----- புளிமா 
நேர் நிரை----கூவிளம் 
நிரை நிரை----கருவிளம் 
---இவை ஈரசைச் சீர் வாய்ப்பாடு 
இதில் ஒவ்வொன்றிலும் நேரசையை சேருங்கள் காய்ச்சீராகும் . 
நேர் நேர் நேர் --- தேமாங்காய் 
நிரை நேர் நேர் ---புளிமாங்காய் 
நேர் நிரை நேர் ---கூவிளங்காய் 
நிரை நிரை நேர் ---கருவிளங்காய் 

இப்பொழுது இந்த அசை வாய்ப்பாடு கொண்டு ஒரு குறள் வெண்பா
எழுதுவோம் :

விழியில்  கயல்இதழில் முத்துக்கள் பெண்ணே
கடலில் பிறந்தாயோ நீ 

மேலே சொன்ன குறிப்புகள் படி அசை பிரித்துப் பார்ப்போம்.

விழியில் /// கயல்இதழில்//// முத்துக்கள் /////பெண்ணே
நிரை நேர்// நிரை நிரை /////நேர் நேர் நேர்////நேர் நேர்
தேமா ................கருவிளம் .........தேமாங்காய்‍...தேமா
கடலில் ///////பிறந்தாயோ/////// நீ 
நிரைநேர்.....நிரை நேர் நேர் ...நேர்
தேமா .............தேமாங்காய் ‍‍‍.......நாள் போல்

முதல் அடியை கவனிக்க :
மா முன் நிரை விளம் முன் நேர் காய் முன் நேர் ‍‍‍‍......தளை சரி
முதல்டி ஈற்றுச்சீர் மாமுன் 2வ்து அடி முதல் சீர் நிரை....தளை சரி

இரண்டாவது அடியை கவனிக்க :
மா முன் நிரை காய் முன் நேர் .........................தளை சரி

வெண்பா விதிப்படி
முதலடி நான்கு சீர்கள் கொண்டு அமைந்துள்ளது
2வது அல்லது ஈற்றடி மூன்று சீர்கள்கொண்டு அமைந்துள்ளது.
ஈற்றுச் சீர் நீ ஓரசைச் சீரால் ஆனது
தளைகள் சரி .
ஆகவே  TESTED PURE  வெண்பா .

முயன்று பாருங்கள். நீங்களும் வெண்பா எழுதலாம்

~~~கல்பனா பாரதி~~~