நீங்களும் வெண்பா எழுதலாம் 2

KalpanaBharathi
செப்டம்பர் 18, 2016 04:48 பிப
வெண்பாவுக்கான இலக்கண குறிப்புகள் : ‍‍‍

குறில் நெடில் தனித்து அல்லது ஒற்றெடுத்து வருவது நேர் அசை (தேர் ஏன் நீ தென் ) 
இரு குறில குறில்நெடில் இருகுறில் ஒற்று குறில நெடில் ஒற்று நிரை அசை (நிரை படம் 
சுறா ) 


அசை வாய்ப்பாடு : 

நேர் நேர்----- தேமா 
நிரை நேர்----- புளிமா 
நேர் நிரை----கூவிளம் 
நிரை நிரை----கருவிளம் 
---இவை ஈரசைச் சீர் வாய்ப்பாடு 
இதில் ஒவ்வொன்றிலும் நேரசையை சேருங்கள் காய்ச்சீராகும் . 
நேர் நேர் நேர் --- தேமாங்காய் 
நிரை நேர் நேர் ---புளிமாங்காய் 
நேர் நிரை நேர் ---கூவிளங்காய் 
நிரை நிரை நேர் ---கருவிளங்காய் ---இவை மூவசைச்
சீரில் காய்ச்சீர் ஆகும் இதில் இறுதியில் நிரை வர கனிச்சீராகும் 

"கனிச்சீர் வெண்பாவில் வரக் கூடாது !"
........................................................................................................

வெண்பாவில் ஈற்றடி மூன்று சீர்கள் கொண்டு அமையும் . 
ஈற்றுச் சீர் காசு நாள் மலர் பிறப்பு என்பதுபோல் அமைய வேண்டும் 
ஓரசை சீராகவே ஈற்றுச் சீர் அமைய வேண்டும்.
தனிக் குறில் ஈற்றுச் சீராக வரக் கூடாது 

‍‍‍...............................................................................................................................................
மேலே உள்ளது வெண்பா எழுத அடிப்படைக் குறிப்புகள்
இந்த விதி கொண்டு ஒரு வெண்பா முயர்சிப்போம்,

இரண்டு அடிகள் குறள் பா

மூன்றடிகள் சிந்தியல் வெண்பா

நான்கு அடிகள் அளவடி வெண்பா

5 முதல் 12 வரை அடிகள் கொன்டது பஃறொடை வெண்பா

அதற்கு மேல் நீண்டால் கலிவெண்பா.


முதலில் ஒரு குறட் பா முயலுவோம் வள்ளுவன் கோலோச்சும்
கவிப்பா . நமக்கு சாத்தியமா . ஏனில்லை ?


தெள்ளமுது தேன்குறள் என்றும் திகட்டாத
வள்ளுவ னின்நல்  விருந்து


அசைப்பிரித்து அலகிடுவோம்

தெள்ளமுது /// தேன்குறள்/// என்றும்/// திகட்டாத
நேர் நிரை //// நேர் நிரை//// நேர் நேர்/// நிரை நேர் நேர்
கூவிளம்///// கூவிளம்/////////தேமா/////////புளிமாங்காய்

வள்ளுவ//////னின்நல்///////  விருந்து
நேர் நிரை/// நேர்நேர்//////நிரை (து குற்றியலுகரம்" பிறப்பு " போல்

மா முன் நிரை (தேமா புளிமா முன் ) வரவேண்டும்

விளம் முன் நேர்(கூவிளம் , கருவிளம் முன்)
காய்முன் நேர்(தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்
காய் முன் ) வரவேண்டும் .
விதிப்படி அமைந்திருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்கவும்  மா முன் நேரோ விளம் முன் காய் முன் நிரையோ வந்தால்
தளை தட்டுகிறது என்று பொருள் . இது தூய வெண்பாவாகாது.
தளை பற்றி பின்னால் பார்ப்போம்
.

தெள் வள் என்பதில் ள் இரண்டடிகளிலும் எதுகையாக வருவதால்
இது ஒரு விகற்ப குறள் வெண்பா .
மேலும் பார்ப்போம்.


~~~கல்பனா பாரதி~~~