நீங்களும் வெண்பா எழுதலாம்

KalpanaBharathi
செப்டம்பர் 18, 2016 03:33 பிப
 

வெண்பாவுக்கான இலக்கண குறிப்புகள் : ‍‍‍

குறில் நெடில் தனித்து அல்லது ஒற்றெடுத்து வருவது நேர் அசை (தேர் ஏன் நீ தென் ) 
இரு குறில குறில்நெடில் இருகுறில் ஒற்று குறில நெடில் ஒற்று நிரை அசை (நிரை படம் 
சுறா ) 


அசை வாய்ப்பாடு

நேர் நேர்----- தேமா 
நிரை நேர்----- புளிமா 
நேர் நிரை----கூவிளம் 
நிரை நிரை----கருவிளம் 

---இவை ஈரசைச் சீர் வாய்ப்பாடு 
இதில் ஒவ்வொன்றிலும் நேரசையை சேருங்கள் காய்ச்சீராகும் . 
நேர் நேர் நேர் --- தேமாங்காய் 
நிரை நேர் நேர் ---புளிமாங்காய் 
நேர் நிரை நேர் ---கூவிளங்காய் 
நிரை நிரை நேர் ---கருவிளங்காய் 
---இவை மூவசைச்
சீரில் காய்ச்சீர் ஆகும் இதில் இறுதியில் நிரை வர கனிச்சீராகும் 


"கனிச்சீர் வெண்பாவில் வரக் கூடாது !"
........................................................................................................


வெண்பாவில் ஈற்றடி மூன்று சீர்கள் கொண்டு அமையும் . 
ஈற்றுச் சீர் காசு நாள் மலர் பிறப்பு என்பதுபோல் அமைய வேண்டும் 
ஓரசை சீராகவே ஈற்றுச் சீர் அமைய வேண்டும்.
தனிக் குறில் ஈற்றுச் சீராக வரக் கூடாது


இந்த இலக்கண விதி கொண்டு ஒரு புகழேந்தியின் ஒரு நள வெண்பாவை 
அசை பிரித்து அலகிட்டு ஆராய்வோம் : 


செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள் 
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் ----மெய்ம்மை 
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான் 
உளனென்பான் வேந்தன் உனக்கு , 


செம்மனத்தான் / தண்ணளியான்/ செங்கோலான்/ மங்கையர்கள் 
நேர் நிரை நேர் / நேர் நிரை நேர் / நேர் நேர் நேர் / நேர் நிரை நேர் 
கூவிளங்காய் /கூவிளங்காய் /தேமாங்காய் /கூவிளங்காய் 


(மூவசைச் சீரில் காய் முன் நேர் வர அமைக்கப் பெற்றிருக்கிறது ) 

தம்மனத்தை /வாங்கும் /தடந்தோளான் ----மெய்ம்மை 
நேர் நேர் நேர் /நேர் நேர் /நிரை நேர் நேர் -----நேர் நேர் 
தேமாங்காய் /தேமா /புளிமாங்காய் /-------தேமா 


(காய் முன் நேர் மா முன் நிரை சரியாக அமைந்திருக்கிறது ) 

நளனென்பான் /மேனிலத்தும் நானிலத்தும் / மிக்கான்
நிரை நேர் நேர் /நேர் நிரை நேர் /நேர் நிரை நேர்/ நேர் நேர் 
புளிமாங்காய் /கூவிளங்காய் /கூவிளங்காய் /தேமா
 

(முந்திய அடி தேமா முன் நிரை காய் முன் நேர் மிகவும் சரி ) 

உளனென்பான்/ வேந்தன் /உனக்கு , 
நிரை நேர் நேர் /நேர் நேர் நிரை நேர் 
புளிமாங்காய் /தேமா
(ஈரசை ஈற்றுச்சீர் பிறப்பு என்பது போல் ) 
காய் முன் நேர் மா முன் நிரை. 

உனக்கு ....நிரை நேர் என்று ஈரசையாகக் கொள்ளக் கூடாது
கு முழுமாத்திரை ஒலிக்கா குற்றியலுகரமாகும். எனவே உன என்பது மட்டும்
நிரை அசை. உனக்கு என்பதை ஓரசைச் சீராகக் கொள்ள வேண்டும்.


மேலே சொன்ன வெண்பா விதிக்கு உட்பட்டு நடக்கிறது இந்த வெண்பா. 
பாராட்டுக்குரியவர் புகழேந்தி. மேனிலத்தும் நானிலத்தும் வெண்பாவில் 
நின்னை மிக்கான் யார் ? புன்னகைக்கிறார் புகழேந்தி . 


இது தனிச் சொல் பெற்று வரும் நேரிசை வெண்பாவாகும்
நேரிசை இன்னிசை வெண்பாக்கள் பற்றி
மேலும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்
.

~~~கல்பனா பாரதி~~~