போராட்டம்-சிறுகதை

Asokan Kuppusamy
செப்டம்பர் 10, 2016 12:08 பிப
”நம்மூரு தண்ணீய திறந்து விட்டா, நாம வேடிக்கையா பார்த்துகிட்டு இருக்க முடியும்” ”டேய், நாளைக்கு பேராட்டம்டா, நம்ம கட்சி சார்பா எப்படியும் ஒரு லட்சத்துக்கு மேல ஆட்களை கூட்டிவந்துடு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. …”எப்படியும் ஒரு கை பார்த்துடும்ன்டா.
             
              அந்த கட்சியின் தலைவர் தனது தொண்டருக்கு கட்டளையிட்டு விட்டு மறு வேலைக்கு புறப்பட்டார்.
 
              ”தலைவரின் கட்டளைப்படியே தொண்டர் கூட்டத்தை சேர்த்து ஒரு திடலில் அமர்த்தி விட்டார்.
 
                ”எங்க ஊரு தண்ணீ எங்களுக்கே, எங்களுக்கே தண்ணீ இல்லே, இதுல மத்தவங்களுக்கு எப்படி தரமுடியும்” அப்படின்னு விராவேசமாக ஆளுக்கு ஆள் முழங்கினார்கள். ஒட்டுமொத்தமாக தண்ணீர் பாயும் கால்வாய்களின் ஓரம் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
              போலிஸ் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தார்கள். கண்ணீர் புகைகுண்டுகள் வீசினார்கள். கூட்டம் அங்காங்கே சிதறி ஓடியது. கூட்டத்தை ஏற்பாடு செய்த அந்த கட்சியின் தலைவரும் தலைத்தெறிக்க ஓடி, ஒரு வீட்டிற்குள் புகுந்து கொண்டார்
 
               அவருடைய அலைபேசி கிணுகிணுத்த்து. ”என்னம்மா சொல்லும்மா, என்ன விஷயம், நான் இங்க போராட்டத்துல இருக்கேன் என்றார்.
 
              ”என்னங்க, இங்க, ஒங்க அம்மா திடிர்ன்னு ஒடம்புக்கு முடியாம, ”அடியே, ஒரு வாய் தண்ணி குடுடி, நா-வறட்டுது” அப்படின்னு  தடுமாறி தடுமாறி கேட்டாங்க. நானும், அவங்களுக்கு,  தண்ணீ கொடுக்கலாம்-ன்னு சமையல் அறைக்கு போனேன்.
 
              ஆங்கே, ”தண்ணீர் குழாயில் தண்ணீரே வராம நின்னு போயிருந் த்து. வழக்கமா அது மெயின்டனென்ஸ் நாளு” எனக்கும் ஞாபகமில்லாம தண்ணீ பிடிச்சு வெக்காமேயே விட்டுட்டேன். இப்ப ஒங்க அம்மாவுக்கு இழுத்திட்டிருக்கு” நீங்களாவது கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வாங்க”ன்னு அழுதபடியே சொன்னாள் தலைவரின் மனைவி.
 
              வீட்டிற்குள் ஒளிந்திருந்த தலைவர், வெளியே வந்து, ஒரு பாட்டிலாவது தண்ணீர் எடுத்து போகலாம்-ன்னு  ஓடும் கால்வாயை நோக்கி போனார்.
              ” கால்வாயை நோக்கி போனவரின் கால்களைப் பதம் பார்த்த்து, ஒரு காவலரின் தடியடி. அப்படியே சுருண்டு விழுந்து ”தண்ணீருக்கு” போராட்டமா? என்று முனகியபடியே மயங்கி கீழே விழுந்தார்.