சிறுகதை= மது (எ) பெயரில்..

malar manickam
செப்டம்பர் 07, 2016 09:50 முப
 
    “என்னடா ரவி… மொபைல யார் கூட சாட் பண்ணிட்டு இருக்க..?;;’

   ‘ரம்யா கூட டா..’

  ‘உனக்கு வேற வேலையே இல்லையா. எப்பவும் போனையே நோண்டிட்டு இருக்க..?’

  ‘அடப்போடா மகேசு. இது தான் என்ஜாய் பண்ற வயசு. இந்த வயசுல பொண்ணுங்க கிட்ட கடல போடாம, வயசான பிறகா பேச முடியும் சொல்லு..?’

‘  நீ சொல்லுறதுலாம் கரெக்ட்டு தான். ஆனா அதே கதியா இருந்தா எப்படி..?’

  ‘அடப்போடா, நீ எப்பவும் இப்படி தான். உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவியே. நான் கிளம்புறேன் போடா.’

‘ போடா போ. அவா கழட்டி விட்ட பிறகு, இந்த மகேசு கிட்ட தான் வரணும்.’

‘‘அதெல்லாம் நடக்கும் போது பாப்போம்டா….’’

  மகேஸ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறான். அவனது அப்பா கூலி வேலை செய்பவர்.  ‘என்ன மாதிரி படிக்காம நீ கஸ்டப்படக் கூடாது’ என்று சொல்லி சொல்லி அவனை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைப்பவர். அதனாலேயே மகேஸ் பெண்களிடம் பேச  கூட மாட்டான். பெண்களிடம் பேச வேண்டும், பழக வேண்டும என்ற ஆசை உண்டு. ஆனால் வெளியில் பெண்களை பிடிக்காதது போல காட்டிக் கொள்வான்.

  அன்று தல அஜித் படம் ரீலீஸ், ஏற்கனவே இருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தான் ரவி. மறுநாள் காலையில் மகேசுக்கு போன் செய்து,

 ‘ மச்சி தப்பா நெனச்சுக்கிடாத டா. ரம்யா படத்துக்கு வாறேன்னு சொன்னா..’
 
‘   நீ என்னடா சொன்ன..?’
 
‘ நான் சரின்னு சொல்லிட்டேன். சாரி டா மச்சி.’

 ‘ போட வெண்ண. உன்ன போய் நம்புன பாரு. இப்படி கால வாரிட்டியே. இனி உங்கிட்ட பேசுனா பாரு..’

 ‘ மச்சி வெயிட்டிங்ல ரம்யா வர்றா, அப்பறம் பேசுறேன்;’ என போனை கட் பண்ணினான்;.

 ‘ இதுக்குது தான் இவனுங்கலயே நம்பக் கூடாது. பொண்ணுங்க இருந்தா ஒரு மாதிரி பேசுறானுங்க, பொண்ணுங்க இல்லனா ஒரு மாதிரி பேசுறானுங்க.’ என்று புலம்பினான்.

  அன்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் தேவையான வாங்கிவிட்டு, பேருந்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் மகேஸ். வரும் வழியில் வ.உ.சி புங்கா முழுவதும் ஜோடி ஜோடியாக காதலர்கள் இருந்தனர்.  அதை பார்த்ததும் நமக்கும் ஒரு லவ்வர் இருந்தால் நல்லா இருக்குமே என்று அவனுக்கு தோன்றியது.  

 ‘ டே ! இதெல்லாம் உனக்கு செட் ஆகாதுடா. நீ ஒரு பயந்தாங்கோலி .மூடிட்டு வேலைய பாரு..’ என்று உள் மனசு சொன்னது.

  பேஸ்புக், வாட்ஸ்அப்’;பில் லவ்வரை பிடிக்காலாம் என்றால், அவனது டப்பா போனில் அந்த வசதி இல்லை.

   அந்த நேரம் பார்த்து, ‘ உங்களுக்கு பெண் நண்பாகள் தேவையா..?’  உடனே ‘ஹாய’; என்று 5900 நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும் என்று ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் வந்தது.
  அதைப் பார்த்த அவன் ஹாய் என மெசேஜ் அனுப்பினான். இன்னும் சிறிது நேரத்தில் இன்னொரு நண்பருடன் இணைக்கப்படுவீர்கள் என்று ஒன்னாருபா பைசா ; போனது. திரும்ப மெசேஜ் ஏதுமவரவில்லை. பத்து நிமிடம் கழித்து,

 ‘ஹாய் அயம் மது ப்ரம் சென்னை..’ என்று ஒரு; மெசேஜ் 5900 என்ற நம்பரில் இருந்து வந்தது. 

 ‘அயம் மகேஸ்’ என வேக வேகமாக டைப் செய்து அனுப்பினான்.

   அடுத்து நீங்க என்ன பண்றீங்க, குடும்பத்தில் எத்தன பேர், உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என நிறைய விசயங்களை பரிமாறி;க் கொணடார்கள். கிட்டதட்ட அரைமணி நேரம் பேசிய பின்பு
  
  கடைசியாக, ‘மது உங்க போன் நம்பர் கிடைக்குமா..?’

  ‘இல்ல வேண்டாங்க..’

  ‘அப்படி சொல்லாதீங்க. இப்ப கட் ஆயிட்டா இ;னி மேல் உங்கள தொடர்பு கொள்ள முடியாம போயிரும். ப்ளீஸ தாங்க..’

  ; ‘நீங்க மிஸ் யுஸ் பண்ணிட்டா..’

  ‘நானும் அக்கா, தங்கச்சி கூட பிறந்தவன் தான். அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்..’

  ‘சும்மா சினிமா டயலாக்லாம் பேசாத. நான் நம்பர் தாறேன். ஆனா இது அப்பா நம்பர். அதனால நான் மெசேஜ் பண்ணுணா மட்டும் தான், நீ மெசேஜ் பண்ணணும.; நீயா மெசேஜோ காலோ பண்ணிறாதஇ அப்பறம் பெரிய பிரச்சனை ஆயிரும். ஓ.கேவா..?;’

  ‘ஓ.கே.. ரொம்ப தேங்ஸ்ங்க’; என நம்பரை வாங்கினான். நமக்கு ஒரு கேர்ள் ப்ரண்ட் கிடைச்சிட்டாடோய்  என மகேசுக்கு ஒரே சந்தோசம்.

  அன்றிலிருந்து இரவு 8மணிக்கு மேல் ஒரு மணி நேரம் மெசேஜ் பண்ணுவாள். இப்படியே ஒரு வாரம் போனது. ஆனால் ஒரு நாள் கூட போனில் பேசியதில்லை. மெசேஜில் மட்டும் தான் பேசிக் கொள்வார்கள்;.

 ஒரு நாள் அவன், ‘மது உங்கூட பேசனும் போல இருக்கு..’

  ‘எனக்கும் ஆசை தான்டா. வெயிட் பண்ணு. நானே ஒரு நாள் கால் பண்றேன். வீட்ல எல்லோரும் இருக்காங்க..’ என்றாள்.

 அடுத்த நாள், ‘மகேஸ் நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே..?’
‘ சொல்லு மது..’

 ‘ஒரு ஐம்பது ருபா ரீசார்ஜ் பண்ணிவிடேன்.’

 ‘கண்டிப்பா பண்ணிவிடுறேன். இதெல்லாம் யாராவது தப்பா நெனப்பாங்களா லூசு.’ என உடனே ரீசார்ஜ் பண்ணிவிட்டான். ஒவ்வொரு நாளும் மெசேஜில் பேசி நெருக்கமானார்கள்.

  இரண்டு நாட்கள் கழித்து, ‘மகேசு இப்ப புதுசா வந்த படத்துல பாட்டுலாம் நல்லாயிருக்கு. டவுண்லோடு பண்ணணும். நெட் கார்டு போட்டு விடேன்’ என்று மெசேஜ் அனுப்பினாள்.

 உடனே அவனும் போட்டு விட்டான். இப்படி அவள் ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் தவறாமல் ரீசார்ஜ் பண்ணிவிட்டான்.

‘‘மகேசு உன்ன மாதிரி ப்ரெண்டு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்டா.’’

‘‘ ஏன் அப்படி சொல்லுற…’’

‘‘   என்னமோ தெரியலடா … உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.’’ 

‘‘ எனக்கும் தான்டீ..’’

‘ மது இப்படியே எத்தன நாளைக்கு தான் மெசேஜிலே பேசிக்கிட்டு இருப்ப. சீக்கிரமா கால் பண்ணு. உன் வாய்ச கேட்கணும்ணு ரொம்ப ஆசையா இருக்கு.’

‘‘எனக்கு மட்டும் ஆசை இல்லயாடா. இது அப்பா மொபைல்டா. என்கிட்ட மட்டும் மொபைல் இருந்தா என்னைக்கோ பேசிருப்பேன்டா.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா’’ 

‘‘ம்ம்ம்… சரிப்பா…’’

 மது உங்கூட பேசனும் போல இருக்கு என்று அவன் ஒவ்வொரு முறை கேட்கும்  போதெல்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லி  தவிர்த்து கொண்டே வந்தாள். ஆனால் அடிக்கடி ரீசார்ஜ் மட்டும் பண்ண சொன்னாள். இவனும் வீட்டில் எதாவது பொய் சொல்லி பணம் வாங்கி ரீசார்ஜ் பண்ணிவிட்டான். இரண்டு மாதத்தில் ஆயிரம் ருபாய்க்கு மேல் ரீசார்ஜ் பண்ணியிருந்தான். ஆனால் ஒரு நாள் கூட போனில் பேசியதில்லை. 

 எப்படியாவது போனில் பேச வேண்டும் என்று நினைத்த அவன் இ ஒரு நாள்; மதுவுக்கு போன் செய்து, தன் தங்கச்சியை பேச வைத்தான்.

ரிங் போனது,

   ஒரு வாலிப பையன் போனை எடுத்து, ‘ஹாலோ..’ என்றான்

   ‘நான் மதுமிதா  ப்ரண்ட் பேசுறேன். அவ இருந்தா பேச சொல்லுங்களேன்;’ என்று மகேஸ் தங்கச்சி சொல்ல..

  ‘இங்க அப்படி யாரும் இல்ல. ராங் நம்பர்’ என கட் பண்ணினான். திரும்ப வேறொரு போனில் இருந்து கால் பண்ணினான். மறுபடியும் ராங் நம்பர் என்றார்கள்.

  மகேசுக்கு குழப்பமாக இருந்தது. மது என்ற பெயரில் நமக்கு மெசேஜ் பண்ணுவது யார் என கண்டுபிடிக்க தொடங்கினான்.

  மறு நாள் மகேஸ், அந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிக் கொண்டே இன்னொரு நம்பரிலிருந்து கால் பண்ணினான்.  வாலிப பையன் போனை எடுத்தான்.

  ‘ஹாலோ நான் அன்பு  பேசுறேன். மதுமிதா இருந்தா பேச சொல்லுங்களேன்.’

  ‘இங்க அப்படி யாரும் இல்லங்க. ராங் நம்பர்.’

  ‘அப்படின்னா மதுங்கிற பெயருல, இந்த நம்பரிலிருந்து மகேசுக்கு மெசேஜ் பண்றது யாரு..?’

  ‘அப்படி யாரும் மெசேஜ் பண்ணலயே..’

  ‘பொய் சொல்லாத. இப்ப கூட இந்த நம்பரிலிருந்து மெசேஜ் வந்ததே. மதுங்கிற பேருல ஏமாத்துறது நீ தானா..  சொல்லு..’ என்று கோபமாக கேட்க, முதலில்
மறுத்தவன் பின்பு ஒரு கட்டத்தில்

  ‘ஆமாண்டா. நான் தான். அதுக்கு இப்ப என்னடா’ என்று போனை கட் பண்ணினான்.

  அடுத்து போன் செய்தால், ‘சுவிட்ச் ஆப்’ என்றது.

மது என்கிற பெயரில் இவ்வளவு நாள் மெசேஜ் பண்ணியது ஒரு ஆண் என்பதை அவனால் நம்பமுடியவில்லை. பெண்களின் பெயரில்  எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள் என வருத்தப்பட்டான் மகேஸ்.
                                   - மலர் (எ) மாணிக்கம்.
                                           தூத்துக்குடி.