வாழைத்தண்டு - கேழ்வரகு டோக்ளா

V SUMITHRA
செப்டம்பர் 06, 2016 05:54 பிப

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1 கப் நறுக்கியது
பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
கேழ்வரகு மாவு - 1 கப்
பச்சை மிளகாய்  - 6
இஞ்சி - சிறு துண்டு
தயிர் - 1 கப்
பெருங்காயம் சிறிது
உப்பு  -தேவைக்கு
தாளிக்க
எண்ணை,கடுகு,கருவேப்பிலை,உளுந்து,இட்லி மிளகாய்ப்பொடி,வரமிளகாய்,கொத்தமல்லி,தேங்காய்துருவல்.
 

தயாரிக்கும் முறை

செய்முறை-

முதலில் பருப்புகளை ஊறவைத்து பச்சைமிளகாய்,இஞ்சி,வாழைத்தண்டு சேர்த்து   அரைக்கவும்.பிறகு கேழ்வரகு மாவு தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.பிறகு ஒரு வட்டமான செபரேட்டரில் நெய் தடவி இந்த மாவை அப்படியே கொட்டி வேகவைக்கவும்.பிறகு அதை  வெட்டி
கடுகு,உளுந்து,வரமிளகாய்,    கருவேப்பிலை,கொத்தமல்லி,இட்லி மிளகாய்ப்பொடி,தேங்காய்த்துருவல் இவற்றை எண்ணையில் வறுத்து சேர்க்கவும்.தொட்டுக் கொள்ள கார சட்னி நன்றாக  இருக்கும்.
30 முதல் 1 மணி வரை
உபயோகிப்பதை பொறுத்தது