கருவேப்பிலை பொடி

V SUMITHRA
செப்டம்பர் 06, 2016 05:30 பிப

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை - 1 கப்
துவரம் பருப்பு - 100 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கு
 

தயாரிக்கும் முறை

கருவேப்பிலை கழுவி நிழல் உலர்த்தலாக உலர்த்தவும்.இரண்டு நாட்கள் கூட வீட்டுக்குள் உலர்த்தலாம்.நன்கு உலர்ந்தால் நன்றாக பொடியாகும். பிறகு பருப்பு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையும் சிறிது எண்ணையில் வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.கருவேப்பிலை  பொடி தயார்.இதில் கருவேப்பிலை இல்லாமல் பொடித்தால் பருப்பு பொடி.இதை சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய் சேர்த்து உண்ண வயிற்று பொருமல்,அஜீரணம்,வயிற்றுப் புண் முதலியவை தீரும்.
5 முதல் 15 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது