கார்ன் ப்ளேக்ஸ் குழிப்பணியாரம்

V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2016 04:22 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

மீந்து போன இட்லி,தோசை மாவு
காரன் ப்ளேக்ஸ் பொடி - 1 கப் அல்லது
தோசை மாவு குழிப்பணியார கல்லில் ஊற்றும் அளவுக்கு
வெங்காயம் - 1
பச்சை  மிளகாய் - 3 
கருவேப்பிலை,கொத்தமல்லி
எண்ணை- தேவைக்கு
உப்பு -தேவைக்கு

தயாரிக்கும் முறை

கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸியில் பொடிக்கவும்.மீதமான தோசைமாவுடன் கார்ன் ப்ளேக்ஸ் பொடி லேசாக கடுகு தாளித்து,வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி,உப்பு சேர்த்து கலந்து குழிப்பணியாரக் கல்லில் எண்ணையில் ஊற்றவும்.குழிப்பணியாரம் தயார். இதே  போல் கருப்பட்டி சேர்த்து சாக்லேட் கார்ன் ப்ளேக்ஸ் சேர்த்து இனிப்பு பணியாரம் செய்யலாம்.
1-5 நபர்கள் வரை
15 முதல் 30 நிமிடங்கள்