பனீர் பால் சூப்

V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2016 04:11 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை 

வீட்டில் தயாரித்த பனீர் - 1 கப்
வெங்காயம்,தக்காளி -குறைந்தது 1
காய்கறி கலவை - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - சில பற்கள்
பச்சை மிளகாய் -3
கருவேப்பிலை ,கொத்தமல்லி அலங்கரிக்க
மிளகு தூள்,உப்பு தேவைக்கு
வெண்ணைய் - 2ஸ்பூன்
லவங்கம்,பட்டை,ஏலம்-சிறிது
 

தயாரிக்கும் முறை

1/2 லிட்டர் பாலை திரித்து பனீர் செய்து கொள்ளவும்.
பிறகு சிறிது வெண்ணையில் ஏலம்,லவங்கம்,பட்டை தாளி்த்து,வெங்காயத்தில் சிறிது,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு  ,தக்காளி,கேரட் என விரும்பிய காய்கறிகளை வதக்கி, வெந்த காய்கறி,மசாலா கலவையை அரைத்து நீர்சேர்த்து கொதிவிட்டு வடிகட்டவும்.பிறகு வடிகட்டிய சூப்புடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.பனீரை உருண்டையாக உருட்டி அதில் போடவும்.இறக்கி கொத்தமல்லி கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்.பனீர் பால் சூப் தயார்.காரம்,காய்கறிகள்
விருப்பத்திற்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.
1-5 நபர்கள் வரை
30 முதல் 1 மணி வரை