ரோஜாப்பூ பர்பி

V SUMITHRA
ஆகஸ்ட் 06, 2016 03:39 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை -

பன்னீர் ரோஜாப்பூ  - 5
பன்னீர் ரோஜாப்பூ உலர்த்தி அரைத்த தூள் - 1 கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 3
நெய் -  3 ஸ்பூன்

அலங்கரிக்க - பிஸ்தா,பாதாம் சீவல்
 

தயாரிக்கும் முறை

செய்முறை -

வாணலியில் நீர் வைத்து புது பன்னீர் ரோஜாக்களை கழுவி ஏலக்காயுடன்  கொதிக்க விடவும். கொதித்து ரோஜாப்பூ வண்ணம் நீர் வந்தவுடன் நீரை வடித்து அதில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்.கம்பி பாகு குறைந்தது 2 கம்பி பதம் வந்தவுடன் நெய்  மற்றும்  பன்னீர் ரோஜாப்பூ தூள் 1 கப் சேர்த்து நன்கு சேர்ந்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி
பாதாம் ,பிஸ்தா சீவல்களை தூவி வில்லைகள் போடவும்.
உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்