ப்ரூட்டி பனீர்

V SUMITHRA
ஆகஸ்ட் 03, 2016 03:15 பிப

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

பனீர்  -  200கிராம்
பேரீச்சம் பழம் - 100கிராம்
மாம்பழம்  - 1
சர்க்கரை - 100கிராம்
வெண்ணைய் - 50கிராம்
அலங்கரிக்க - பாதாம்,முந்திரி சீவல்

 

தயாரிக்கும் முறை

செய்முறை -

          பேரீச்சம்பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து சர்க்கரை  பாதி அளவு சேர்த்து ,ஒரு ஸ்பூன் வெண்ணைய்  சேர்த்து வாணலியில் கிளறவும்.சர்க்கரை  கரைந்து எல்லாம் சேர்ந்து வரும் நேரம் வெண்ணைய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.அதன் பிறகு மாம்பழத்தை அரைத்து சர்க்கரை மீதியை சேர்த்து கிளறவும். வெண்ணைய் சேர்த்து ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.பேரீச்சம்பழ இனிப்பை கொட்டிய தட்டில் அதை வெட்டி பேரீச்சம் பழம் மேல் பனீரை சிறிய சதுரங்களாக வெட்டி வைத்து அதன் மேல் மாம்பழக் கலவையை ஸ்பூனால் எடுத்து வைக்கவும் பிறகு அதை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பறிமாறவும்.இதில் பனீருடன் எதுவும் சேர்க்காமல் சமைக்காமல் இருப்பதால் இதை சாப்பிட தாமதமானால் குளிர் பதனப்பெட்டியிலேயே வைக்கவும்.
15 முதல் 30 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது