தோல்வியை தொடாதவங்க

Asokan Kuppusamy
ஜூலை 08, 2016 09:12 பிப
நூலகத்திலே புத்தகத்தை தேடும்போது தற்செயலா ”தமிழ் தனிப்பாடல் திரட்டு-ன்னு ஒரு புத்தகம் கையில சிக்கிக்கிச்சு… விட்டுடுவேனாக்கும்….அலசி ஆராய்ந்தா…. ஒரு புலவர் பாடல் எழுதி இருக்காரு. அது இன்னான்னா….  இந்தந்த இராசிக்காரர்கள் இப்படி..இப்படி…அப்படி..அப்படி-ன்னு. அம்புட்டேதான். அதை கவனமா குறிச்சு வைச்சு…இப்ப ஒங்க பார்வையில….
 
                நீங்கள் மேஷ ராசியா? -  … ஒங்களை யாருமே எதிர்க்க கூடாது. நீங்கதான் ராஜா, நீங்கதான் மந்திரி..அப்படி ஒரு நினைப்பு”  சரியா
                           உங்களது ரிஷப ராசியா--- ”ஒங்க கிட்ட யாரும் நெருக்கமா இருந்திடப்படாது, அப்படி நெருக்கமா இருந்தா ஒங்களுக்கு பிடிக்காது என்பது ஒங்களுக்குத்தானே தெரியும்…அடுத்தவங்களுக்கு தெரியாதுல்ல… சரிதானே
                           மிதுன ராசிக்கார்களா ? நீங்கள்” ஒங்க வீட்டுக்கு அடிக்கடி வருவதை விரும்ப மாட்டிங்க. அப்படி வந்தால் அவங்க கிட்ட சரியா பேசமாட்டீங்க..சரிதானே
                           கடக ராசியா உங்களோடது… ”நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும்…ஒங்க கிட்ட இருந்து எட்டியே இருப்பாங்க” சரிதானே நான் சொல்றது
                சிம்ம ராசியா…! அய்யோ கேட்கவே வேண்டாம்..ஒங்க்கிட்ட வைச்சுக்கவே மாட்டோம்..போங்க சரிதானே
 
                            கன்னி ராசியா…ஒங்களோடது…அப்படின்னா … எப்படி பெண்கள்கிட்ட ஒரு அடி தள்ளி நின்னு பேசுவோமோ அப்படி… ” நான் சொல்றது நெசந்தானே.
 
                      தோல்வி இல்லாத ஆளா நீங்க… அப்ப துலாம் ராசிதான். கரெக்ட்தானே
 
                      விருச்சிக ராசி ஆசாமியா …நீங்க… ஒங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கறதுன்னா…கொஞ்சமா யோசிக்கணுமே..
 
                            இணக்கமா பேசினா இணங்கிட்டீங்களா” அப்ப தனுசு ராசிக்காரங்கதான். அவ்வளவு இணக்கமானவங்க. நீங்க எப்படி?
 
                            “ஓங்க சங்காத்தமே வேண்டாங்க” அப்படின்னா…நீங்க மகர ராசிக்காரங்கதான்.
                                               
                                    நூறு பேரு மொத்தமா வந்த மொத்த தயாரா வந்தாலும்..சமாளிக்கும் திறமைசாலி யாருன்னா…அது கும்ப ராசிக்காரங்கங்கோ”
                            எப்போதும், தோள்கொடுக்கும் தோழமையான ஆளா…நீங்க. ஒங்களது மீன ராசிதானே.
                       
                                       ” ஏடாகூடாமா சொல்லி இருக்கிற ராசிக்காரங்க யாரும் சண்டைக்கு வந்திடாதீங்க…ஏன்னா இது நான் சொல்ல்ல. பழங்கால நூலான தனிப்பாடல் திரட்டில் இருந்து திரட்டினது-ன்னு முதல் பத்தியில சொல்லிட்டேன் . ஒத்தாசைக்கு யூடியூப் காணொளி இதோ!!!!