மனிதர்கள்

சாந்தினி
May 29, 2016 10:58 முப
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் வசித்து வந்தனர் , முதல் சகோதரரின் பெயர் நீலன் ,இரண்டாவது ஜனா .நீலனுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் ,ஒரு பெண் குழந்தை ,ஜனாவுக்கு மனைவி மற்றும் மூன்று ஆண் ,ஒரு பெண் குழந்தை இருந்தனர் .ஜனாவின் மூத்த பெண்தான் இந்த கதையின் நாயகி. அவள் பெயர் மதி ,மதி பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காக காத்து கொண்டிருந்தாள் .நீலனும் ஜனாவும் சேர்ந்து குளிர்பானம் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தனர். பணம் அநேக மனிதர்களை தன் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டது அதற்கு நீலனும் விதிவிலக்கல்ல , ஜனாவை ஏமாற்றி குளிர்பான தொழிலை தன்வசபடுத்தி கொண்டு ஜனாவையும் அவனுடைய குடும்பத்தையும் வெறும்கையோடு வீட்டை விட்டு வெளியேற்றினான் .ஜனா என்ன செய்வது எங்கு போவதென்று தெரியாமல் அலைந்து திரிந்து ஒரு சிறிய கிராமத்திற்கு தன் குடும்பத்துடன் வந்தான் .எப்படியும் வாழ்ந்தாக வேண்டுமே ,ஜனா , அவனது மனைவி மற்றும் மதி அந்த கிரமத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து கூலி வேலைக்கு சென்றனர்.மதி பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள் .ஆனால் இப்போது அவர்கள் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் அவளை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது ,மதி தட்டச்சு படித்து அங்கயே வேலைக்கும் சேர்ந்தாள் ,