அன்புள்ள காதலனுக்கு

கார்த்திகா    பாண்டியன்
இதழ்கள்  உலர்ந்ததடா உன் முத்தங்களின் துணையற்றுப் போய்;
கண்கள் மயங்கக் காத்திருந்தேன் என் கள்வனின் வரவை எண்ணி;
மூச்சினில் உன் சுவாசம் நீங்காமல் நிறைந்திருக்க மூர்ச்சை தனை அளிக்கும் என்னவன் எங்கே?
கனவிலாவது வந்துவிடு உன் காதலியின் கவலை தீர்க்க;
கண்மணியினுள் பூட்டிவிடு என் கதலனின் நினைவுகளை;
காத்திருக்கும் காலம் யாவும் கனவாய் கலைந்துவிட;
காதலுடன் விரைவாய் நான் கல்லறைதனை அடையும் முன்பே.