பா வேந்தனுக்கு ஒரு பா

KalpanaBharathi
ஏப்ரல் 21, 2016 07:10 பிப
 

பா வேந்தனுக்கு 
ஒரு பா எழுதினால் 
பக்கங்களில் எல்லாம் ரோஜா விரியும் ! 


நா வேந்தனுக்கு 
ஒரு பா எழுதினால் 
நாவெல்லாம் தமிழ்த் தேனினிக்கும் ! 


எழுத்து வேந்தனுக்கு 
ஒரு பா எழுதினால் 
இதயத்தில் காவிரி ஆறு பெருகி ஓடும் ! 


தமிழ் வேந்தனுக்கு 
ஒரு பா எழுதினால் 
எண்ணமெல்லாம் இலக்கியச் சோலை விரியும் ! 


புரட்சிக் கவிஞனுக்கு 
ஒரு பா எழுதினால் 
புத்தகமெல்லாம் குருதிப்பூக்கள் பூத்து நிற்கும் ! 


~~~கல்பனா பாரதி~~~ 

இன்று பாரதி தாசனின் நினைவு நாள் . 
கவி மன்னனை நினைவு கூறுவோம்