சுதந்திரக் காற்று வீசுமா.?

rupan
பிப்ரவரி 27, 2016 08:44 பிப

சுதந்திர நாடே சுதந்திர நாடே
எங்கள் சுதந்திரம் எங்கே போனது.
சுடெரிக்கும் எறிகணைகள்
சுடுகுழல் பிரங்கி சுத்தமாய் பதம் பார்த்தது.
சுதந்திர தேசத்தில் ஈழத்தமிழனின் உடலை
வீதி எங்கும் கோயில் எங்கும்
சுடுகாடாய் போனதப்பா
சுதந்திர தேசத்திசத்தில்பாலுக்கு அழுத பாலகன்
தாய்முளையில் குடித்தபால்
சொட்டுச் சொட்டாய்
உதிர வெள்ளத்தில் உறைந்தம்மா
பாலுக்கு அழும் பாலகன்
இறந்த பிணம் என்று பாராமல்
உயிரற்ற தாயின் முலையில்
பால் குடித்த பாலன் வாழ்வது
எங்கள் ஈழ தேசத்தில்தான்.வீதி எங்கும் மரண ஓலங்கள்
சப்தம்மிட குடிமனைகள்
விகாரமாய் எரிந்தம்மா
சுதந்திர தேசம் என்று
உலக அரங்கிற்கு பறைசாற்றும்
எம் நாட்டு அரசியல் வித்தகர்களே.
வருகிற சுதந்திர நாளி மட்டுமாவது
எம்மின சுதந்திரமாய் வாழுமா?சிறை அறைகளிலும் சொல்ல முடியாத
துன்ப சிலுவையை சுமந்த வண்ணம்.!
சொந்த பாசங்களை தவிக்க விட்டு!
சிறை கம்பிகள் பூட்டு போட.
கண்ணீர் சிந்திய வாழ்வாக வாழ்கிறது.
எம் ஈழ தேசத்து தமிழினம்
வருகிற சுதந்திர தினத்தினலாவது
சுதந்திரம் மலருமா?
என்ற ஏக்கக் கனவுடன்
நாளைய விடியல்.மலர்கிறது.
சுதந்திர தேசத்தில்.


இக் கவிதை மலேசியாவின் தேசிய நாள் ஏடு தமிழ்மலரில் வெளிவந்த கவிதை 21-02-2016.

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-