காலம் வரும் காத்திரும் சீமாட்டி.

rupan
பிப்ரவரி 17, 2016 07:50 முப
.அகவிளக்கில் மலர்ந்தவளே.
அகம் முழுதும் எரிகின்றாய்
உடல்முழுதும் நீ இருப்பாய்
உயிரெல்லாம்  நீ வருவாய்.
 
 
தித்திக்கும் உன் நினைவு!
திகட்டாத உருவமடி உன்  மேனி
பட்டத்து பால் நிலவும்,
வெட்கி தலை குனியும் -உன் நிறம்.
 
 
கன்னத்து குழியழகு கார்மேக -முடியழகு
வண்ணத்தில் நீ இருப்பாய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருப்பாய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்.
 
 
வில்லழகு நெற்றியிலே
பொட்டழகு மின்னுதடி.
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு  புன்னகையும் –செய்யுதடி.
 
 
ஆண்டுகள் பல கடந்தடி
எண்ணற்ற குறுஞ்செய்தி.
கைபேசி நினைவகத்தில்.
உன் நினைவை சொல்லுமடி..
தினம் தினம்.
 
 
காகிதத்தில் கவி எல்லாம் நான் எழுதி
காதலர் தினம் வரும் வரை
காலமெல்லாம் காத்திருப்பேன்-சீமாட்டி!
உன் அருகில் நான் இருக்க.!

-நன்றி-
-அன்புடன்-
கவிஞர் த.ரூபன்
திருகோணமலை-இலங்கை