விறகு வெட்டும் தொழிலாளி

rupan
பிப்ரவரி 09, 2016 01:58 முப
விறகு வெட்டும் தொழிலாளி
வாழ்க்கை என்னும் புனித பயணத்தை
பூக்கள் கொண்டு மாலை போனால்
கண்ணீர் என்னும் மழைத்துளிகள்.
சாரல் வீசுகிறது ஏழையின் வீட்டில்
ஏழு நாட்கள் பட்டினி கிடந்து.
ஏழ்மை வாழ்வை போக்கவே.
நித்தம் நித்தம் காடும் கரம்பும்
கால்கள் எல்லாம் நடந்திடவே.
கானகமே வாழ்க்கையானது.


சில நேரம் கண்ணுறங்கும்-போது.
ஈறெடுத்த பிள்ளைகளின் அழுகுரல்கள்
கேட்கும் போது. மனம் எல்லாம்
துடியாய் துடித்தது பாச பிணைப்பினால்
கடலோரம் மணல் வீடு கட்டி
கரையோரம் வாழும் நண்டுகள்
மலையோரம் போனாலும் வாழ இடமுண்டு.


மனிதன்தான் கைவிட்டான் மனிதத்தை
தெய்வங்கள் படைத்த
இயற்(க்)கை நமக்கு வரமப்பா.
ஏழ்மை வாழ்வை போக்கிடவே.
விறகு வெட்டும் தொழிலே
வாழ்க்கைக்கு வந்தது.
இயற்(க்)கை அன்னையின் அன்பினால்
இந்த ஏழையின் வயிறு நிறைந்ததுவே.

கவிஞர் த. ரூபன்
திருகோணமலை-இலங்கை